Sunday, December 21, 2008

பயணம்


குளிர்காலம் துவங்கிவிட்டது, ஆம் நாம் இப்போழுது மார்கழியில் உள்ளோம்... ஆண்டாள், திருப்பாவய், மார்கழி பஜனய், பெருமாள் கோவில் பிரசாதம், பனி.... ஆஹா மறக்க முடியுமா அந்த நாட்களை.... இதோ நான் காண்கிறேன் பாவாடை தாவணியில் என் பள்ளித் தோழிகளுடன் திருப்பாவை பாடிக் கொண்டு.... இப்பொழுதோ இவை அனைத்தையும் மிறித்தோன்றுவதோ வெறும் குளிர். ஆம் இத்துர தேசத்தில் பனி ஒன்றைத்தான் அனுபவிப்பது. என்ன செய்வது பிழைக்கவேண்லுமே.
குளிர் என்றதும் எனக்கு மற்றும் ஒன்று நினைவுக்கு வருவதுண்டு “நயகரா” அப்பப்பா.... இயற்கை தன் எழில் அனைத்தையும் பாலாக உறுமாற்றி வழிந்தோடுகிரதோ என என்னத்தோன்றும். விழ்ச்சியின் இரைச்சலையும் தாண்டி ஓர் மௌனத்தின் அழகு தெரிந்தது....

ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது.

வாழ்வில் அனைவரும் ஓர் தடவையேனும் சென்று பார்க்க வேண்டிய இடம்.

பயணம் தொடரும்....

No comments:

Post a Comment